Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாஸ
சுற்றுலா விசாவில் குவைட்டுக்குச் சென்று அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்;ப்பு பணியகத்தில் தடுத்துவைக்கப்பட்டு, பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்ட இலங்கைப் பெண், செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
கலேவெல்ல, கொஸ்கஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான இந்திராணி குமாரியே, இலங்கைக்கான குவைத்தூதரகம் மேற்கொண்ட முயற்சியின் பின்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் குவைத் நாட்டுக்குச் சென்ற தனது மனைவியை, மீட்டுத்தருவதற்கு உரியவர்கள் முன்வர வேண்டுமென நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆர்.எம்.லொக்குபண்டா (வயது 40) என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வெளியாகியிருந்த இச்செய்தியை வாசித்தறிந்துகொண்ட இலங்கைக்கான குவைத் தூதுவர், அது தொடர்பில் குவைத்துக்கான இலங்கை தூதுவராலயத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இம்முயற்சியின் பயனாகவே அப்பெண் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் தெரிவித்த இந்திராணி குமார,
'என்னை பணிக்கு அமர்த்திய வீட்டில் உணவு வழங்காமல் வேலையை செய்யுமாறு வற்புறுத்தியதுடன் அடித்து கொடுமைப்படுத்தினர். வேலை செய்ய முடியாது என்று கூறியதை தொடர்ந்து என்னை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுரிமையாளர்கள் என்னை அடித்து துன்புறுத்தியதாக நான் கூறினேன். அதன் பின்பு என்னை அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தடுத்து வைத்தனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வேலைக்கு அனுப்பி வைப்பர். ஆனால் அந்த வீட்டுக்காரர்கள் எவ்வித பணமும் தருவதில்லை' என்றார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லலுறும் தனது குடும்பத்தை முன்னேற்றுவதற்கு வெளிநாட்டு பணிப்பெண் வேலைவாய்ப்பு உறுதுணையாக அமையும் என முகவரொருவர் கூறிய கதையை கேட்டு இந்திராணி குமாரி வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமானார்.
இந்நிலையில, இந்திராணி குமாரியை மேற்படி முகவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி விசாவில் அனுப்பாது சுற்றுலா விசாவில் குவைத் நாட்டுக்கு அனுப்பியுள்ளார். தான் சுற்றுலா விசாவில்தான் செல்கிறேன்; என அறியாத அவர், குவைத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இவரை மீட்பதற்கு உரியவர்கள் முன்வரவேண்டுமென்றும் லொக்கு பண்டா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago