Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை கொண்டுவரும் பொழுது சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றார்கள்.
அவர்களுடன் நாட்டில் சமத்துவம் அகிம்சை இன மத ஒற்றுமை பற்றி போதிக்கும் பௌத்த மத குருமார்களும் தமிழர்களின் உரிமைகள் என்று வரும்பொழுது அவர்களும் பாதையில் இறங்கி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துகின்றனர்.
இந்த நாட்டில் இனங்களின் ஒற்றுமையை ஒருசில இனவாத அரசியல்வாதிகளால் பிளவுகள் ஏற்படுத்துவதாலே நாட்டின் அபிவிருத்திகள் பாதிக்கப் படுகின்றன.
என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியலயமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்து எடுத்த நடவடிக்கைக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதில் எந்தவித இலாபமோ நன்மையோ இல்லை. இந்த மதகுருமாரின் போராட்டம் நடவடிக்கை இந்த நாட்டில் வாழும் மக்களிடையே மேலும் பிளவை ஏற்படும்.
இந்த நாட்டில் மாகாண ரீதியில் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே இந்த நாட்டில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டுவரப்பட்டது. அதன் மூலமே மாகாணசபைகள் உறுவாக்கப்பட்டது.13 ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப் பட்ட மாகாண சபைகள் மூலம் மாகாண ரீதியாக பலஅபிவிருத்திகள் நடைபெற்றன.
இந்த 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.என இந்தியாவும் அழுத்தம்கொடுத்து வருகின்றது.ஆனாலும் இந்த நாட்டிலுள்ள ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் பௌத்த மதருமார்களை தூண்டிவிட்டு 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என எதிர்ப்புகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஒற்றுமை சமத்துவம் தர்மத்தை பற்றி பேசும் பௌத்த மத குருமார்களே நாட்டின் நிலவும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பாதையில் இரங்கி போராட்டம் நடத்துவதை பார்க்கும் பொழுது நாட்டில் எவ்வாறு மக்கள் ஒற்றுமையாக வாழ்வது.
இன்று இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் வேட்பு மனுக்கள் பெற்று தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின் இப்பொழுது அந்த தேர்தலை கூட நடத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திண்டாடுகின்றார்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் பங்காளி கட்சியினரும் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள இவ் வேளையில் தேர்தல் ஒத்தி வைப்பதற்கான காரணத்தை அரசாங்கத்திடம் பங்காளி கட்சிகள் கேட்காமல் இருப்பது வெட்கி தலைகுனிய வேண்டும்.
எனவே இந்த நாடு ஜனநாயக நாடு ஜனநாயக ஆட்சி என்று கூறிய போதிலும் ஜனநாயகத்திற்கு இங்கு இடமில்லை. என்றுதான் கூறவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைமுறைக்கு வருகின்றதோ அன்றுதான் இந்த நாடு பஞ்சத்திலிருந்து மீண்டு நாடு அபிவிருத்தியடைந்து மக்கள் சுபீட்சமாக வாழமுடியும். என கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025