Kogilavani / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ, மொஹொமட் ஆஸிக்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன் செனவிரத்னவை தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று(26) இரத்தினபுரி நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதேவேளை,மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முன்னாள் அமைச்சரான ஜோன் செனவிரத்னவுக்கு ஆதரவு தெரிவித்தும் இரத்தினபுரி நகரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகிலுள்ள நூலகத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இதனிடையே இரு கட்சிகளின் ஆதவர்களுக்குமிடையே மோதல்கள் இடம்பெற கூடும் என்பதை கருத்திற்கொண்டு, இரத்தினபுரி நகரில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago