Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
டயகம பிரதேசத்தில் அதிகமானவர்கள் இன்னும் சிவில் ஆவணங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதை கருத்தில்கொண்டு, நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் விவாகச் சான்றிதழ் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இப்பிரதேசத்தில் உள்ளதுடன், அடையாள அட்டை பெயர் மாற்றம் செய்தல், காணி உரிமை பத்திரம் போன்ற விடயங்களை வழங்கும் வகையில், 156 ஆவது பொலிஸ் தினத்தையொட்டி, டயகம பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை டயகம சிங்கள மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
இதில் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரிகாமம், டயகம ஈஸ்ட், வெவரலி, டயகம டவுன் ஆகிய கிராமசேவகர் பிரிவில் உள்ளவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் ஆவணங்களை பெற்றுக்கொள்ள வரும் நபர்கள் தேவையான தகவல்களை கொண்டு வரவேண்டுமென டயகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கே. எட்டியாராய்ச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025