Editorial / 2024 ஜூன் 16 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் புகையிரதம் தலவாக்கலை மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் உள்ள 117வது மைல் கம்பத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் தடம்புரண்டது என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ஓடும் ரயிலின் இன்ஜின் மற்றும் மூன்று சனிக்கிழமை (15) பெட்டிகள் இரவு 9.30 மணியளவில் 117வது மைல் போஸ்ட் அருகே உள்ள பாலத்தின் மீது கவிழ்ந்தது.
டிக்கிரி மெனிகே புகையிரத தடம்புரண்டதன் காரணமாக சனிக்கிழமை (15) இரவு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதமும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமும் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
ரயில் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் ஊடாக ஹட்டன் மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரயில்களில் ஏற்றப்பட்டனர் என கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட டிக்கிரி மெனிகே ரயிலின் இயந்திரம் மற்றும் மூன்று பெட்டிகளை தண்டவாளத்தில் ஏற்றும் பணியை நாவலப்பிட்டி மற்றும் பதுளை ரயில் நிலையங்களின் அனர்த்த திணைக்கள ஊழியர்கள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளனர்.
கவிழ்ந்த புகையிரதத்தின் இயந்திரம் மற்றும் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் வரை, ரயில் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
7 minute ago
23 minute ago
30 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
30 minute ago
47 minute ago