R.Maheshwary / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ( 30) ஆம் திகதிக்கு பின் இன்று (06) காலையிலேயே வாகனங்களுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது.
சுமார் மூவாயிரம் லீட்டர் டீசல் இறக்கப்பட்டு அவை வழங்கப்பட்ட நிலையில், அங்கு முந்நூறுக்கு அதிகமான வாகனங்கள் டீசல் பெற்றுக்கொள்ள காத்திருந்தன.
இருப்பினும் சுமார் ஐம்பது வாகனங்களுக்கு மாத்திரம் டீசல் வழங்கப்பட்டு,டீசல் தீர்ந்து விட்டது என நிலைய முகாமையாளர் தெரிவித்ததையடுத்து, கோபமடைந்த சாரதிகள் முகாமையாளருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
எனினும் கந்தப்பளை பொலிஸாரால், பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் டீசல் இல்லாமல் திரும்பிச் செல்லப் போவதில்லை என தெரிவித்து அங்கேயே காத்திருக்கின்றனர்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026