R.Maheshwary / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
திஸ்ஸமஹாராமயிலிருந்து மஸ்கெலியா பகுதிக்கு சுற்றுலா சென்ற இளைஞர்களால் இன்று (28) ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மஸ்கெலியா பகுதிக்குப் பயணித்த குறித்த இளைஞர்கள், எரிபொருள் தேவைக்காக ஹட்டனிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
எனினும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லையென அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் வீடு செல்வதற்காகவேனும் 20 லீற்றர் டீசலையாவது தருமாறு பணியாளர்களிடம் கோரியுள்ளனர்.
இதனை பணியாளர்கள் நிராகரித்த போதே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து அதிகாரிகள் வருகைத் தந்து நிலைமை சுமூகமாக்கியுள்ளனர்.
அத்துடன் பொகவந்தலாவை தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 20 லீற்றர் டீசலை அந்த இளைஞர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
6 minute ago
15 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
21 minute ago
27 minute ago