2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தொட்டிலில் தொங்கிய சிறுமியின் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) அன்று மாலை 5.45மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 

குறித்த சிறுமியின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் இனங்கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்து கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13வயதுடைய மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த சிறுமி பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07ல் கல்வி கற்று வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபுது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்ற சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .