2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தண்டவாள இரும்புகளை மறைத்து வைத்திருந்தவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

46000 ரூபாய் பெறுமதியான 23 அடி நீளமான ரயில்  தண்டவாள இரும்புகளை வைத்திருந்த நபரை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தண்டவாள இரும்புகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, இன்று (13)  மேற்கொண்ட சோதனையின் போது, இரும்புகளுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் போது இந்த இரும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க ஹோட்டல் உரிமையாளர் மறுத்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உரிய அனுமதியின்றி அரச சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X