2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தனிப்பட்ட இலக்குகளை அடைய சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பல்வேறு தனிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது  என தெரிவித்துள்ள மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றார்.

 மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் செயல்படுவது மிகவும் அவசியம். சமூக வலைதளங்கள் மூலம் பரவும் சில பெண் ஆசிரியர்களின் செயற்பாடுகள்  குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளதா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை  கல்விச் சூழலில், குழந்தைகளின் மனப்பான்மையை வளர்ப்பதுடன், அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் செயல்படுவது மிகவும் அவசியம் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X