2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தனியார்- இ.போ.ச பஸ் சாரதிகளுக்கிடையில் மோதல்

R.Maheshwary   / 2022 ஜனவரி 06 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா              

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி ஒருவருக்கும் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கும்  இடையே ஏற்பட்ட மோதலில், இ.போ.ச. பஸ் சாரதி கடுங்காயங்களுக்குள்ளாகி ஹல்துமுல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட தனியார் பஸ் சாரதி, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதால், சாரதியையும் நடத்துனரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு பயணிகளை ஏற்றிச் சென்ற சந்தர்ப்பத்திலேயே, இரண்டு சாரதிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன்,  தனியார் பஸ் சாரதியும், நடாத்துனரும் இணைந்து, இ.போ.ச. பஸ் சாரதியை பஸ்ஸிலிருந்து வெளியில் இழுத்து கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X