Janu / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து தபால் ஊழியர்களுக்கும் மாதாந்தம் 20,000 ரூபாய் வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் திங்கட்கிழமை (25) நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண, தபால் வருவாயை அதிகரிக்கும் சட்ட மேம்பாட்டு முன்மொழிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்களை ஒடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், ஊழியர் உரிமைகளை பறிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தபால் தொழிற்சங்க முன்னணியின் 25 தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மதிய உணவு நேரத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பி.கேதீஸ்




3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago