Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பொகவந்தலாவைப் பிரதேசத்தில், சில தோட்டங்களுக்கு, கடந்த ஆறு வருடங்களாக நேரடித் தபால் விநியோகம் இடம்பெறாமைக் குறித்து, தபால் திணைக்களத்திடம் முறையிட்டுள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“பொகவந்தலாவை தபால் பிரிவுக்கு உட்பட்ட லொயினோன், பொகவந்தலாவை, பெற்றசோ, டின்சின் ஆகியத் தோட்டங்களிலுள்ள தோட்டப் பிரிவுகளுக்கான நேரடித் தபால் விநியோகம், கடந்த ஆறு வருடங்களாக இடம்பெறாமைக் குறித்து, தொழிலாளர்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
“இவ்விடயம் தொடர்பாக பொகவந்தலாவை தபாலகத்தை தொடர்புகொண்டு கேட்டேன்.
தபால் ஊழியர்கள் நியமிக்கப்படமையால், இந்தப் பிரதேசங்களுக்கு நேரடித் தபால் விநியோகம் இடம்பெறுவதில்லையென அவர் தெரிவித்தனர்.
“குறிப்பிட்ட கடிதங்கள், தோட்டக் காரியாலயங்களுக்கு ஒப்படைக்கப்படுவதாகவும், ஏனையக் கடிதங்கள் குறித்து தபாலகத்தில் பொது அறிவித்தலில் காட்சிப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
“மேலும் தோட்டக்காரியாலயங்களில் நூற்றுக்கணக்கான கடிதங்கள் நீண்டகாலமாக தேங்கிக் கிடப்பதாக தெரியவருகின்றது.
“உரியவர்களுக்கு நேரடியாகத் தபால்களை விநியோகிப்பதற்காகவே, தபால்கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. எனினும், பெருந்தோட்டங்களுக்கு உரிய முறையில் தபால்சேவைகள் இடம்பெறுவதில்லை.
“இவ்விடயம் தொடர்பாக தபால் திணைக்களத்தின் பிரதித் தபால் ஆணையாளர் (ஒப்ரேசன் ) எல்.ஏ.விக்கிரமசிங்ஹவிடம் அறிவித்த போது, புதிதாக தபால் ஊழியர்கள் 1,800 பேர் நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், உரிய அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தோட்டப் பகுதிகளுக்குத் தபால் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அதுவரை, தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago