R.Maheshwary / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகளின் விளைவாக நாட்டு மக்கள் கொந்தளித்து இருக்கின்றார்கள். இனம், மதம், மொழி என்பவற்றினை கடந்து அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாடுதழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில், தலவாக்கலையில் நடைபெறவிருக்கும் போராட்டத்துக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும்.
பெருந்தோட்ட மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அவர்களின் தொழில் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதி செய்யவும் அரசாங்கத்தின் பொய்த்துப்போன வாக்குகளுக்கு பதிலடி வழங்கவும் தனது தலைமையில் பதுளை எங்கும் பல போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றது என்றார்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026