R.Maheshwary / 2022 மே 29 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருள்கள். கட்டம் கட்டமாக வழங்கிவைக்கப்படுவதுடன், முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ கிராம் வீதம் வழங்கப்படும். நிரந்தர வருமானம் பெறுபவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படாது என, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு பிரதி தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்
நுவரெலியாவிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இந்த நிவாரண உணவுபொருட்களை வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு பகிர்தளிப்பதற்காக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்த நிவாரணப் பொருட்கள் தோட்டப்புறங்களில் வாழுகின்ற வேலை செய்பவர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும் அதேபோல குறைந்த வறுமானம் பெறுபவர்களுக்கும் சமூர்த்தி பெறுபவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்தவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். இது உரிய முறையில் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையும் மாவட்ட செயலாளருடன் நேற்று (28) நடத்தினோம். ஏதாவது ஒரு முறையில் இந்த உணவுபொருட்கள் வழங்கப்படாமல் தட்டிக்களிக்கப்படுமானால் பொதுமக்கள் உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளவும் என்றார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago