2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தமிழரசன் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் நட்ட ஈடு

Freelancer   / 2022 நவம்பர் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - நமுனுகுல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேசமூர்த்தி என்ற இளைஞரின் மரணத்துக்கு நட்டஈடாக 40 இலட்சம்  ரூபாய்   வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இன்று வழங்கி வைத்தனர்.

அதேநேரத்தில் தோட்ட நிர்வாகம் உயிரிழந்த நபருக்கு இழப்பீட்டு நட்டயீட்டு தொகையாக 15 ஆயிரம் ரூபாவையும்,இறுதி சடங்கின் செலவை ஏற்பதாகவும் குறைவாக செலவை  வழங்க திட்டமிட்ட நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை மறுத்திருந்தது.

இருப்பினும் உயிரிழந்த இளைஞருக்கு நட்டயீட்டு தொகையாக நூறு லட்சம் வழங்க தோட்ட நிர்வாகத்தை காங்கிரஸ் வழியுறுத்திய நிலையில் இது தொடர்பாக தொழில் திணைக்களம்,மற்றும் தொழில் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் பயனாக தோட்ட நிர்வாகம் உயிரிழந்த இளைஞருக்கு 40 லட்சம் ரூபாய் வழங்க சம்மதித்திருந்தது.இதனை ஏற்றுக்கொண்டதன் பின் இந்த 40 லட்சம் ரூபாவை தோட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட தொகையை காசோலையாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .