Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
“எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலின் பின்னரும்கூட, மத்திய மாகாணத் தமிழ் கல்வி அமைச்சு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வசமே இருக்கும்” என்று, மத்திய மாகாணத் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிளிப்பு விழா மற்றும் புதிய கட்டடத் திறப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் எ.ரொபட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“நான் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய மாகாண அமைச்சராக பணியாற்றி வருகின்றேன். அத்துடன், தமிழ் கல்வி அமைச்சராக ஆறு மாத காலமாக செயற்பட்டு வருகின்றேன். ஆனால், இதுவரைகாலமும் அரசியல் தேவைக்காக யாரையும் பயன்படுத்தியதுக் கிடையாது.
“நான் கல்வித்துறை சார்ந்தோரை சந்திக்கும் போதும், அந்தத் துறைக்கு ஒருவரை நியமிக்கும்போதும் கல்வித்துறையில் எமது சமூகத்தை உயர்த்த பாடுபடுங்கள் என்றே அவர்களுக்குக் கூறுவேன்.
“அதேபோல, பாடசாலைகளுக்கு எவர் உதவி செய்தாலும்அதனை பெற்றுக்கொள்ளுமாறே பணித்துள்ளேன். சிலர் மத்திய மாகாண அமைச்சரின் தலையீட்டால், பாடசாலைகளில் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியவில்லை என்று, பொய்ப் பிரசாரம் செய்கின்றார்கள்.
“பாடசாலை அபிவிருத்தியில் அக்கரையுள்ளவர்கள் எந்த உதவியையும் செய்யலாம் என்பதை நான் பகிரங்கமாகவே தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
21 minute ago
33 minute ago