Editorial / 2018 மே 07 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினப்பேரணியும் கூட்டமும் தலவாக்கலையில், இன்று (07) நடைபெற்றது.

த.மு. கூட்டணியின் தலைவரும், அரச கருமமொழிகள் அமைச்சருமான மனோகணேசன், பிரதித்தலைவர்களான மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த மே தினக் கூட்டமானது, தலவாக்கலை பஸ்தரிப்பித்திலிருந்து, பேரணியாக தலவாக்கலை நகர மைதானத்தை சென்றடைந்து, கூட்டம் ஆரம்பமானது
நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஸ்ரீதரன், ராஜாராம், பொண்ணையா, சரஸ்வதி சிவகுரு, உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அ.லோரண்ஸ், முற்போக்குக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago