R.Maheshwary / 2023 ஜனவரி 03 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
அரச மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் தமிழ் மொழியைக் கற்று நிறைவு செய்தகேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலக அலுவலகங்களில் கடமையாற்றும் 132 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த தமிழ்மொழி கற்கை நெறி, 150 மணித்தியாலங்கள் நடத்தப்பட்டதுடன்,அதன் இறுதி நிகழ்வு தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் சந்தன அனுருத்த தலைமையில் ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது பயிற்சி நெறியை நிறைவு செய்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தமிழ் மொழியைப் பிரதிபலிக்கக் கூடிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
55 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
9 hours ago