Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக பண்டார
தம்பதிவ யாத்திரை சென்று வருவோர் மலேரியா பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்பு பிரிவு அறிவுருத்தி உள்ளது.
மலேரியா நோயை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபகத்தினால் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அண்மையில் தம்பதிவ யாத்திரை சென்று வந்த சுற்றுலா பயணிகள் சிலருக்கு மலேரியா நோய் தொற்றியிருந்ததாக அறியப்பட்டிருந்தது.
தெல்தெனிய, பொல்கொல்ல, வட்டாரந்தென்ன, அங்குணுகொல பெலஸ்ஸ ஆகிய பகுதிகளிலேயே இந்த நோயாளர் அறியப்பட்டுள்ளனர் எனவும், மீண்டும் இலங்கைக்குள் மலேரியா நோய் பரவ இடமளிக்க முடியாதெனவும் மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.பீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதர ஸ்பானத்தின் மலேரியா நோய் பரவிவரும் பட்டியலில் இந்தியாவும் காணப்படுவாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் நோய் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அந்நாட்டுக்கு சவாலாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து வருடாந்தம் 5 இலட்சம் தம்பதிவ யாத்திரிகர்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது.
![]()
12 minute ago
54 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
54 minute ago
54 minute ago
2 hours ago