2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தயாரத்னவின் தங்க மனசு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாருக்குதான் இப்படி மனசு வரும். ஆனால் தயாரத்னவின் மனசு தங்கமானது என பலரும் பேசி​கொள்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கப் பொதியை பொலிஸாரிடம் கையளித்த சம்பவமானது, மொனராகலை நகரில் பதிவாகியுள்ளது.

மொனராகல- கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் நான்கரை பவுண் நிறையுடைய, ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய பொதியை ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து,  மொனராகல பொலிஸ் நிலையத்துக்குச்  சென்று தான் கண்டெடுத்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து, பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

 சுமணசிறி குணதிலக, நடராஜா மலர்வேந்தன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .