2025 மே 05, திங்கட்கிழமை

தரிசனத்திற்கு சென்றவர் உயிரிழப்பு

Janu   / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலை தரிசனத்திற்கு சென்ற வயோதிபர் ஒருவர்  திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ள  சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

தலங்கம  பிரதேசத்தை  சேர்ந்த வெள்ளலஹேவாவின் பஞ்சிமஹத்தாயா (வயது 70)  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர்  திடீரென சுகயீனமடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பின்னர் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகணை  மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\

செ.தி.பெருமாள் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X