Editorial / 2020 மே 22 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களில் தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை, தோட்ட கூட்டுறவு ஸ்தாபனங்களின் ஊடாக, குத்தகைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட யாக்கத்தினுடான கலந்துரையாடலின்போதே, இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளர் பரத் அருள்சாமி தெரிவித்தார்.
மேலும் வருடம் முழுதும் வருமானத்தை ஈட்டும் வேளாண்மை முறையும் அதற்கு தேவையான அறிவுறைகள் மற்றும் தொழிநுட்பங்களை வழங்கவும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் அனைத்து பெருந்தோட்ட பகுதிகளுக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் இதில் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் தோட்டத்தை அண்மித்துள்ள கிராமங்களில் வாழ்பவர்கள் என அனைவரும் பயனடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், பாரத் அருள்சாமி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட யாக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்த, தோட்ட முகாமையாளர்கள் பிரசதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago