2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தலவாக்கலையில் பெண் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறித்தல் போட்டி

Freelancer   / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கான 2022 ம் ஆண்டு சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டி 06 ஆம் திகதி இடம்பெற்றது. 

ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை பாமஸ்டன் தோட்ட நிர்வாகத்தினால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது பதினைந்து நிமிடங்களில் பறிக்கப்பட்ட கொழுந்தின் நிறைக்கு ஏற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். 

அதற்கேற்ப ஏ.புவனேஸ்வரி முதலாம் இடத்தையும்; ஜெகஜோதி வடிவு இரண்டாம் இடத்தையும் பி.சுமதி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும்,பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கி வைக்கப்பட்டு தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் தோட்ட முகாமையாளர் தெகான் உலங்கமுவ, தலைமை வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஏ.எப்.ஜோர்ஜ்,கே.நித்தியானந்தன், குமாஸ்தா ஜே.செல்வகுமார்,கே.தயாளினி மற்றும் தோட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .