R.Maheshwary / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
அதிபர்,ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என கோரி தலவாக்கலை வித்தியாசேகர பாடசாலையின் பெற்றோர்களால் தலவாக்கலை நகரில் இன்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை வித்தியாசேகர பாடசாலை வளாகத்திலிருந்து பேரணியாக வந்த பெற்றோர்கள்; தலவாக்கலை நகர சுற்று வட்டத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
“ஆட்சியாளர்களே அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வை வழங்கு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாதே, பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் ஈடுப்பட்டனர்.
6 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
36 minute ago