2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தலவாக்கலை நகரம் சுற்றுலா நகரமாக மாறவுள்ளது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

தலவாக்கலை நகரை சுற்றுலா நகரமாக மாற்றும் வேலைத்திட்டம், நூறு மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்களுக்கும் முகம் கொடுத்துள்ள போதிலும் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் நிறுத்தப்படவில்லை.எமது நாடு அந்நியச்செலவாணியினை பெற்றுக்கொள்ளும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நூறு நகரங்கள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் தலவாக்கலை நகரத்தினை சுற்றுலா நகரமாக மாற்றுவதற்காக சுமார் நூறு மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தவிசாளர்  லெட்சுமணன் பாரதிதாசன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X