Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
தலவாக்கலையில் எதிர்வரும் 23ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு, பல தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில், பெருந்தோட்ட நகரங்களிலுள்ள வர்த்தகர்களும், இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும் என், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு..இராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்ட நகர வர்த்தகர்கள், கடைகளை அடைத்துவிட்டு, குறித்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், தொழிலாளர் தேசிய சங்கம், எதிர்வரும் 23ஆம் திகதி, தலவாக்கலையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாரே, அவர் நகர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில், பெருந்தோட்ட நகரங்களிலுள்ள வர்த்தகர்கள், கடையடைப்புப் பேராட்டாத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .