2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தலவாக்கலை மாணவர்கள் நால்வரும் காலியில் மீட்பு

Editorial   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ், கௌசல்யா, சுஜிதா,

தலவாக்கலை பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவிகள் மூவரும் மாணவனும் காலி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேஸ்வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவில் ஜூன் மாதம் (14) முதல் காணாமல் போயிருந்தனர்.

மூவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா, ஞாயிற்றுக்கிழமை (04)  தெரிவித்தார்.

 அவர்கள் காலி மிட்டியகொட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர் நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

முந்திய செய்தி 

தலவாக்கலை கிறேட்வெஸ்டன்  லூசா தோட்டத்தைச் சேர்ந்த சிறுமிகள் முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரை காணவில்லை.

வீடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (14)   மாலை வெளியே சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை  என அவர்களின் பெற்றோர்களால் தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில்  திங்கட்கிழமை (15)  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த சிறுவர் உட்பட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல்  வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0764612289, 0771546724 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பெற்றோர்கள்   கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X