2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தலவாக்கலை- லிந்துலை நகரசபைக்கு புதிய தவிசாளர்

R.Maheshwary   / 2022 மார்ச் 23 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை நிருபர்கள்

தலவாக்கலை- லிந்துலை நகரசபையில் வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளர் பதவிக்கு,  நகரசபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான சந்தன பிரதீப் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் , இன்று (23) நடைபெற்ற கூட்டத்திலேயே,  சந்தன பிரதீப் நகரசபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை- லிந்துலை நகரசபையின்  உறுப்பினரான பிரசன்ன விதானகேயால், சந்தன பிரதீப்பின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், நகரசபையின் உப தவிசாளர் எல். பாரதிதாசனால் அப்பெயர் வழிமொழியப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X