2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தலவாக்கலை புதிய பஸ் நிலைய கட்டடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ரமேஷ்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், தலவாக்கலை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம், மக்களின் பாவனைக்காக இன்று (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்,  மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, முன்னாள் நகர பிதா அசோக சேபால, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் செயலாளர் அஜித் புஸ்பகுமார  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .