2025 மே 15, வியாழக்கிழமை

தள்ளிப் போவதால் தடுமாறும் மக்கள்

Freelancer   / 2023 மார்ச் 05 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ

கினிகத்ஹேன மின்பொறியியல் காரியாலயத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஹட்டன் ருவன்புர கொலனியில் வசிக்கும் மின் பாவனையாளர்களுக்கான மின்கட்டணபட்டியல், 10 நாட்கள் தாமதித்தே வழங்கப்படுகின்றன. இதனால் தாங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகக்கொடுப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

2023 பெப்ரவரி மாதத்துக்கான மின்கட்டண பட்டியல் 40 நாட்களுக்கு பின்னரே வழங்கப்பட்டுள்ளது. அதில், ஆகக் கூடுதலான கட்டண தொகையும் குறிப்படப்பட்டுள்ளது என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

மின் நுகர்வோருக்கான மின்கட்டணம் 30 நாட்களுக்கு ஒரு தடவை மாதாந்தம், இலங்கை மின்சார சபையால் விநியோகிக்கப்பட வேண்டும். ​ருவன்புர கொலனி மக்களுக்கு ஜனவரி மாதத்துக்கான மின்கட்டணபட்டியல்  2023.01.22 மற்றும் 23 ஆம் திகதிகளிலேயே விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெப்ரவரி மாதத்துக்கான மின் கட்டண பட்டியல், மார்ச் 4 ஆம் திகதி, அதாவது 40 நாட்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாவிக்கப்பட்ட மின் அலகுகள் அதிகரித்துள்ளன. ஆகையால் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தாங்கள் பாரிய ​அசௌகரியங்களுக்கு முகக்கொடுத்துள்ளதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாக செய்து வரும் தங்களால் இந்த மின்கட்டணத்தை கட்ட முடியவில்லை என்றும், கடந்த மாதங்களில் வீடுகளுக்கு வாங்கிய மின்கட்டணத்தை விட புதிய கட்டண பட்டியலின் பிரகாரம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த மின்நுகர்வோர் தெரிவித்தனர். .

ஹட்டன் ருவன்புர கொலனியில், மின்சார மீற்றர் வாசிப்பாளரிடம்,  40 நாட்கள் கடந்தும் மின்கட்டணம் வரவில்லை என வினவிய போது அவர் எதுவும் கூறவில்லை என்றும், 30 நாட்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை வழங்குவதாக மீற்றர் வாசிப்பாளர் கூறியதாகவும் ருவன்புர காலனி மின்நுகர்வோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .