Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரா அத்துப்பிட்டிய ஏரியில் தாமரை பூ பறிக்க சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது .
அத்திமலை மகா வித்தியாலயத்தின் 04 வகுப்பில் கல்வி கற்கும் கொவிப்பொல வீதியை சேர்ந்த மதிஷ தேனுவன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பாடசாலை முடிந்து , தனது நண்பர்கள் மூவருடன் தாமரை பறிப்பதற்காக குறித்த ஏரிக்கு சென்றுள்ளார்.அப்போது வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவே வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார் .
சிறுவனுடன் வந்த நண்பர்கள் இச் சம்பவம் தொடர்பில் எவருக்கும் தெரிவிக்காத நிலையில் , மாலை 5.45 மணியளவாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் சிறுவனின் தந்தை சிறுவனை தேடியுள்ளார் .
அப்போது குழந்தை ஏரியை நோக்கி சென்றதை கண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து அங்கு சென்று பார்த்த போது , சிறுவன் ஏரியின் நடுவில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் .
அவரைக் உடனடியாக அத்திமலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
7 minute ago
23 minute ago
30 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
30 minute ago
47 minute ago