2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திடீர் சோதனையின் போது 30 பஸ்கள் சிக்கின

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணங்களை வசூலித்த 30 தனியார் பஸ்களிடம் 1,45,000 ரூபாய் அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் திடீர் சுற்றிவளைப்பு பிரிவின் பிரதான பரிசோதகர் சி.டி. விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து ஹட்டன் மற்றும் ஹட்டனிலிருந்து குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களே இவ்வாறு திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதி போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியின்றி போக்குவரத்தில் ஈடுபட்டமை, பயணிகளிடம் அதிக கட்டணங்களை வசூலித்தமை, அதிசொசுகு பஸ்களில் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியமை உள்ளிட்ட காரணங்களின் கீழ், 30 தனியார் பஸ்களிடம் அபராதத் தொகை அறவிடப்பட்டதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X