Editorial / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வார இறுதி விடுமுறைக்காக தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்பியவர்கள் பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல பேருந்துகள் போதியளவு இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வார இறுதி விடுமுறைக்காக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து திரும்பியோர் பணியிடங்களுக்குச் செல்வதற்கு போதியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஹட்டனிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹட்டன் பேருந்து நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூர சேவைப் பேருந்துகள் ஹட்டன் நகர மையத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கும்.
மோசமான வானிலை காரணமாக பேருந்துகள் வந்து சேரும் வரை காத்திருந்த முறையான இடமொன்று இல்லை. இதனால், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
ஹட்டன் டிப்போவினால் ஹட்டனில் இருந்து கொழும்புக்கு பல பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. எனினும், பஸ்கள் போதுமானதாக இல்லை என பயணிகள் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்க்ஷ




2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago