2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீபரவலால் 50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மஹாவலி ஆற்றின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான ஹட்டன் ஓயாவுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீபரவலால் 50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.

நேற்று (5) மாலை 4 மணியளவில் ஹட்டன்- டன்பார் தோட்டத்திலுள்ள குறித்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீபரவல், இன்று அதிகாலை வரை எரிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வனப்பகுதிக்கு கீழே பல தோட்டங்கள் உள்ள நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கான குடிநீர் இந்த வனப்பகுதியிலிருந்தே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மத்திய ​மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் வரட்சியுடனான வானிலையைப் பயன்படுத்தி, சில விஷமிகள் இவ்வாறு வனப்பகுதிகளுக்கு தீவைப்பதாகவும் இதனால் மலையகத்தின் பல இடங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .