2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தீப்பெட்டி உற்பத்தி பணியாளர்களால் கண்டியில் ஆர்ப்பாட்டம்

மொஹொமட் ஆஸிக்   / 2018 ஜூலை 17 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீக் குச்சிகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப் பொருளை அரசு இறக்குமதி செய்யாததன் காரணத்தால்  நாட்டிலுள்ள 11  தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் செயலிழந்துள்ளதால் சுமார் 8000 க்கும் அதிகமான ஊழியர்கள் தமது வேலையை துறக்க நேரிட்டுள்ளதாகவும், இப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை தருமாரு அரசை வலியுறுத்தி பணியாளர்கள் இன்று (17) காலை கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன் பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி மணிக் கூட்டுக்கோபுரத்துக்கு முன்பாக இருந்து  ஊர்வலமாக வந்த இவர்கள் மாவட்ட செயலகத்தின் முன் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3 மாதங்களாக தீப்பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான மருந்து வகைகளும், அதற்கு தேவையான இரசாயணப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பின்வாங்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த 3 மாதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், சரியான தீர்வு வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, கண்டி நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X