Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 02 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட துனேஷ் கங்கந்த, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய துரோகமிழைத்துவிட்டாரென்று, பெல்மதுளை பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்கள் சாடியுள்ளனர்.
காவத்தை கெட்டியாதென்ன குயின்ஸ் காடன் ஹோட்டலில், நேற்று (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்கள், துனேஷ் கங்கந்தவின் தந்தையும் முன்னாள் பிரதி அமைச்சருமான சந்திரா கங்கந்த மற்றும் பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோரின் வெற்றிக்காக தாம் முன்னின்று செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்ததுடன், துனேஷ் கங்கந்த கள்ளத்தனமாக ஐ.தே.கட்சியில் இருந்து மாற்றுக் கட்சிக்குப் பாய்ந்தது விட்டாரென்றும் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கு, ஐ.தே.கவே முன்னின்று உழைத்தது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தெரிவித்த அவர்கள், புதிய பிரதமரின் நியமனத்துக்கு விமரச்சனத்தையும் முன்வைத்தனர்.
துனேஷ் கங்கந்த, பெல்மதுளை தேர்தல் தொகுதிக்கு 8ஆவது ஐ.தே.க அமைப்பாளராவாரென்றும் அவர் மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டால் நாம் சேர்த்துக் கொள்வோம் என்றும் இல்லாவிட்டால் பெல்மதுளை தேர்தல் தொகுதிக்கு, ஐ.தே.க. புதிய அமைப்பாளர் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago