R.Maheshwary / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெரணியகல பொலிஸாரால் நேற்று முன்தினம் (10) இரவு 10 மணியளவில், வாகனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. தெரணியகல வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அதிகளவு சத்தத்துடன் வாகன ஒலியை எழுப்பிய வாகனங்கள், காப்புறுதி மற்றும் வருமானவரி பத்திரங்கள் அற்ற வாகனங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் 39 வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதன்போது 300 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், 25 வாகன சாரதிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சீதாவக்க சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.ஏ.ஜே.கொடிதுவக்குவின் ஆலோசனைக்கமைய தெரணியகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
54 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago