Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
தெற்காசிய சிலம்பம் போட்டிகள், நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை, இலங்கை சிலம்பம் சம்மேளனம் மேற்கொண்டிருப்பதாக, இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் ராமர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தமிழர்களின் பாரம்பரிய கலைகளில், சிலம்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலையாகும். இதனை எமது நாட்டில் பிரபல்யப்படுத்த வேண்டும் எனும் நோக்கிலேயே,, இந்தப் போட்டிகளை இங்கு நடத்த முடிவு செய்தோம்.
'இந்தப் போட்டிகளில் வெளிநாடுகளில் இருந்து 70 போட்டியாளர்களும் எமது நாட்டில் இருந்து 70 போட்டியாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
'இந்தியா,மலேசியா,சிங்கப்பூர்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தே இந்த 70 போட்டியாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
'எமது நாட்டை பொறுத்தவரையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் 70 போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
'அது மட்டுமல்லாமல் இந்தியாவின் சினிமாத்துறையின் பிரபல சண்டை பயிற்சி ஆசிரியர் பவர் பாண்டியன், சர்வதேச சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் பா.செல்வராஜ் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
'கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோரே, இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்கள் இல்லாமல் இந்நிகழ்வை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
'எதிர்காலத்தில் இந்த சிலம்பம் கலையை இலங்கையிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதே, எனது நோக்கமாகும். அத்துடன், எங்களுடைய சர்வதேச சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் நடிகர் சூர்யாவை இங்கு அழைத்து வந்து, ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
'தெற்காசிய சிலம்பம் போட்டிகள், நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதுடன் இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், சிறப்பு அதிதயாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
போட்டியின் பரிசளிப்பு, நாளை மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025