2025 ஜூலை 12, சனிக்கிழமை

தேசிய நல்லிணக்க சிறுவர் தின விழா

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நல்லிணக்க சிறுவர் தின விழா, நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில், எதிர்வரும் 7ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

மலையக அபிவிருத்தி சம்மேளனம், லியோ கிளப் லங்கா, ரேன்போ சிறுவர் இல்லம் ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று, தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

மத்திய மாகாண சிறுவர் நன்நடத்தை, பாதுகாப்பு, சுகாதார, மகளிர் விவகார ஆணையாளர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், கல்வி வலயப் பணிப்பாளர்கள், சிறுவர் நன்நடத்தை இல்லத்துக்கான அதிகாரிகள், லியோ கிளப் தலைவர் மற்றும் ரேன்போ சிறுவர் இல்ல முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .