2025 மே 17, சனிக்கிழமை

தேயிலைத் தூள் திருடிய அறுவர் கைது‌

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

எல்டப் தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலைத் தூள் திருடியக் குற்றச்சாட்டில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஐந்து பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நேற்று முன்தினம் இரவு நேர  கடமை புரிந்த குறித்த ஆறு பேரும்  44 கிலோ கிராம் தேயிலை தூளை தொழிற்சாலையில் இருந்து எடுத்துச் சென்று,  தொழிற்சாலை வளாகத்துக்குள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகம்  பசறை பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் தேயிலை தூளை கைப்பற்றியதோடு, சம்பவம் தொடர்பில் அறுவரைக் கைதுசெய்துள்ளனர். 

 

திருடப்பட்ட தேயிளைத் தூளின் பெறுமதி, 70,000 ரூபாய் என்றும்  இன்றைய தினம் சந்தேக நபர்களை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .