Freelancer / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன்,ஆ.ரமேஸ்
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மல்வத்து மகாநாயக்க தேரரைப்போல் பேசி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக போலியான தகவல்களை வழங்கிய நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பகுதியில் வசிக்கும் ஒருவரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தற்காலிகமாக அவர் பிலிமத்தலாவை பகுதியில் வசித்துவருபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இடம் மற்றும் காணி விற்பனை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவரும், விளம்பரங்களில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு மகாநாயக்கதேரரை போன்று தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். பின்னர் குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த நபரிடம் நடத்திய சோதனையில் 11 கையடக்க தொலைபேசிகள் ,120 சிம் கார்டுகள், பல இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . அத்துடன் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்கள் , வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை இம்மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
54 minute ago
1 hours ago