R.Maheshwary / 2022 ஜனவரி 19 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
மஸ்கெலியா- சாமிமலை தொங்க தோட்டப்பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலமானது, அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனையிலிருந்து தெரிய வந்துள்ளது.
நேற்று (18) சிரேஸ்ட சட்ட வைத்திய நிபுணர் இனோக்கா ரத்நாயக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின்போது, குறித்த நபர் மரக் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின்பேரில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாதம் 16ஆம் திகதி, மாலை 3 மணியளவில் மதுபோதையிலிருந்த குழுவினர் குறித்த நபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி,ஒரு இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட இடத்துக்கு உயிரிழந்த நபர் சென்ற போது, அந்த குழுவினர் மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த நபர், டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர் சாமிமலை- தொங்க தோட்டத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தம்பிராஜ் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் கண்ட சிறுவன் இது தொடர்பில் சாட்சியமளித்தையடுத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .