Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜா
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
பனிமூட்டம்
ஹட்டன்- கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, நுவரெலியா- கண்டி, தலவாக்கலை - டயகம, தலவாக்கலை - பூண்டுலோயா, தலவாக்கலை - நாவலப்பிட்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில், இறுக் காலை முதல் மாலை வரை அதிக பனிமூட்டம் நிறைந்துக் காணப்பட்டதால், வாகன சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வாகனங்களை செலுத்தினர்.
இந்த வானிலை தொடருமென்பதால், வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு, பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மழை காரணமாக, பிரதான வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால், மிக வேகமாக வாகனத்தை செலுத்துவதைத் தவிர்க்குமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கினிகத்தேனை- ஹட்டன் பிரதான வீதி, டயகம -போடைஸ் - ஹட்டன் செல்லும் வீதியில் பிரஸ்டன் பகுதியில் கற்பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், வாகன சாரதிகள் அதுத் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குளிரான வானிலை
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் டயகமவிலிருந்து போன டஸ் வழியாக அட்டன் செல்லும் வீதியில் பிரஸ்டன் பகுதியில் சில கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அவ்வழியூடாக பயணிப்போர் மிருந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோல் விடுக்கின்றனர்.
அரைநேர வேலை வழங்குமாறு கோரிக்கை
மழை வானிலையை கருத்திற்கொண்டு, அரைநேர வேலை வழங்குமாறு தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடுங்காற்றுடன் மழை பெய்து வருவதால் பாரிய மரங்களுக்கு அருகில் நின்று கொழுந்து பறிக்க முடியாது எனவும் எனவே, மழை வானிலை குறையும்வரை, அரை நேர வேலை வழங்குமாறும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் மரங்கள் காணப்படும் இடங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவேண்டாம் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அக்கரப்பத்தனை காரியாலய தொழில் உறவு அதிகாரி எஸ்.கனகராஜ், தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு
மழை காரணாக, தமது வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால், பாரிய பொருளாதார பிரச்சினைகைய எதிர்கொண்டுள்ளதாகவும் நாட் கூலித் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago