Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கண்ணியமானதும், கௌரவமிக்கதுமான தொழில் நடைமுறைகளை பெருந்தோட்டத் தொழில்துறையில் ஊக்குவிக்கும் வகையிலேயே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னெடுப்புக்கள் அமைந்துள்ளன, என்று, ஊவா மாகாண சபை உறுப்பினரும், சங்கத்தின் நிர்வாகச் செயலாளருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்தார்.
'தொழிலாளர்களின் உரிமைகளையும், மேம்பாடுகளையும், தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பாரியப் பொறுப்பு, தொழிற்சங்கங்களுக்கு உரியது' என்றும் அவர் கூறினார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், தேசிய தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து, தொழிலாளர் கல்வி மேம்பாடுகள் என்ற தொனிப்பொருளிலான செயலமர்வை, பதுளை 'ரிவர்சைட்' விடுதியில, இன்று(16) நடத்தியது.
இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'மலையகத்திலுள்ள ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர்களைவிட, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தோட்ட மட்டத் தலைவர்கள், தொழிற்சங்க உரிமைகளை நன்கு தெரிந்தவர்களாகவும், பக்குவப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
'மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும், தொழிலாளர்கள் தொழிற்சங்க, கட்சி பேதங்களிலிருந்து விடுபட்டு, சமூகரீதியில் ஒன்றிணைந்து செயற்;படும் நிலை ஏற்படல் வேண்டும். பெருந்தோட்டத்துறையில் தொழிற்சங்கங்களின் பலம் அதிகரித்திருந்ததால்தான், ஆரம்பாக் காலங்களில், தோட்ட நிர்வாகங்கள், தொழிற்சங்கங்களுக்கு பயப்படும் நிலை காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. தோட்ட நிர்வாகத்துக்கு பயப்படும் தோட்டமட்டத் தலைவர்களையே நாம் இன்று காண்கின்றோம். இந்நிலை மாற்றமடைய வேண்டும். இதன் மூலமே ஆரோக்கியமானதோர, சூழலை பெருந்தோட்டத் துறையில் ஏற்படுத்த முடியும்.
'இன்று மலையத்தில், 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. இவைகளில் பல தொழிற்சங்கங்கள், பெயர்ப்பலகைகளுக்கும், கடித தலைப்புகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டனவாக உள்ளன.
'அன்று, பத்து இலட்சம் தொழிலாளர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று தொழிற்சங்கங்களே இருந்தன. இன்று ஒரு இலட்சத்து எழுபதாயிரம் தொழிலாளர்கள் இருக்கும் நிலையில், 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால், ஒரு இலட்சத்து எழுபதாயிரம் தொழிலாளர்களில் 80 ஆயிரம் பேர் மட்டுமே, தொழிற்சங்க அங்கத்தவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025