Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று சென்றிருந்த ஜீவன் தொண்டமானிடம், தாம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர்.
தரிசு நிலங்களை விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. அதேபோல அரைநாள் சம்பள பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு கிட்டவில்லை. தொழில்சார் சலுகைகளும் மறுக்கப்படுகின்றன." எனவும் தொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் சம்பந்தமாக தொழில் ஆணையாளருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தினார். தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், தோட்ட நிர்வாகம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
6 minute ago
52 minute ago
56 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
56 minute ago
8 hours ago