2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தொழிலாளர்களின் பணம் மோசடி என கூட்டுறவு ஆணையாளரிடம் முறைப்பாடு

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

வீடமைப்புத் திட்டத்துக்காக, இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன தோட்டத் தொழிலாளர்களிடம் அறவிடப்பட்ட 35 இலட்சம் ரூபாய் பணம், மோசடி செய்யப்பட்டுள்ளதென, சப்ரகமுவ மாகாண கூட்டுறவு ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

வீடமைப்புத் திட்டத்துக்காக, ஹப்புகஸ்தென்ன தோட்டத் தொழிலாளர் வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கத்தால், மாதாந்தம் தலா 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அறவிடப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களின் குறிப்புப் புத்தகத்திலும் அந்தத் தொகை குறிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்தப் புத்தகத்தில் எந்தப் பதிவும் இல்லை என்று தெரிவிக்கும் தொழிலாளர்கள், அறவிடப்பட்ட பணம் உரிய முறையில் வங்கியில் வைப்பிலிடப்படவுமில்லை என்றும் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகமும், இதற்கு உரிய பதிலளிக்காததால், தொழிலாளர்கள், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தமது போராட்டங்களுக்கும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமையால், இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட இயக்குநர் எஸ்.ராஜமணி, இரத்தினபுரி பிரதேச சபையின் உறுப்பினர் கோ.தம்பிராஜா ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி உறுப்பினர்கள், சப்ரகமுவ மாகாண கூட்டுறவு ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X