R.Maheshwary / 2022 மே 22 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
தெற்காசிய நாடுகளில் தேயிலை தோட்டங்களில் தொழில் புரியும் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் அடங்கிய முறைபாடு ஒன்றினை, சர்வதேச தேயிலைதினமான நேற்று (21) ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கப்படவுள்ளதாக காணி உரிமைக்கான செயப்பாட்டாளர் எஸ்.ரி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
சர்வதேச தேயிலை தினத்தினமான நேற்று (21) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இன்றைய சூழலில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாட முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட தெற்காசி நாடுகளில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்நியச் செலவாணியைத் தேடித்தரும் இவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இவர்களுக்குரிய உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை இது குறித்து அந்தந்த நாடுகளின் தொழிற்சங்கங்கள் ,அரசியல்,சமூக செயப்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள் |ஆகியன இணைந்து சூம் தொழிநுட்பத்தின் மூலம் கலந்துரையாடி ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மலையக தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு என்று இன்றும் வீட்டுரிமை கிடையாது. காணியுரிமை கிடையாது. இந்த நிலையில் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை காரணமாக பொருளாதார ரீதியில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago