Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்
“உலகில் இன்று, 7 மணித்தியால வேலைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், 10 தொடக்கம் 12 மணித்தியாலங்கள் வரை தொழில்புரிவதற்கு, தோட்டத் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்து, 10-12 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்க முடியாது. அத்துடன், சுதந்திரமாக வேலை செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்குமான வழியை, அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே, தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க எம்மோடு அணிதிரளுங்கள்” என்று, அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், “தொழிலாளர் உரிமையை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளிலான, துண்டுப்பிரசுரம் விநியோகம், ஹட்டனில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.
“உரித்துடனான காணி மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொள்வோம்”, “வாழ்வதற்கு போதுமான மாதச்சம்பள முறைமையை வென்றெடுப்போம்”, “விவசாய முறைமையை தோற்கடித்து, தொழிலை பாதுகாக்க ஆட்சியாளர்களை வலியுறுத்துவோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களே, இதன்போது விநியோகிக்கப்பட்டன.
அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்டணன் செல்வராஜ், பொருளாளர் கலைசெல்வி உட்பட பலர் கலந்துகொண்டு, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். இதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,
“தொழிலாளர்களின் பிரச்சினையானது, செடி கொடிகளை போன்று வளர்ந்து நிற்கின்றது. ஒன்றும் தீர்ந்தபாடில்லை. 200 வருடங்களாக, ஒரே தொழில், லயன் குடியிருப்புகள், பழையச் சுற்றுச்சூழல், பழைய வாழ்க்கை. இதுவே எமது வரலாறு.
“இதனை மாற்றியமைக்க வேண்டும். புதிய வாழ்வை நோக்கி நாமும் பயணிக்க வேண்டும். அதற்காக போராட்ட நாம் தயாராக வேண்டும்.
“ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்திலிருந்து, எமது சமூகம் காணி மற்றும் வீட்டுப்பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
“1994 ஆண்டில் நிவாரணக்கடன் அடிப்படையில், வீடுகள் கட்டித்தருவதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். 2005 ஆம் ஆண்டில், மாடி வீடுக் கட்டித்தருவதாக . நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களை அண்மித்துள்ள போதிலும், 145,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இன்னமும் கொட்டில்களிலும் லயன்களிலுமே வாழ்ந்து வருகின்றனர்.
“அதேபோல துண்டிக்கும் முறைமையிலான சம்பள முறையே, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணப்படுகிறது. இந்த சம்பள முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
“அங்கிகரிக்கப்பட்ட விதிமுறையுடனான மாதச்சம்பளம் முறைமையை பெறுவதற்காக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து போராட, தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago