2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம்

R.Maheshwary   / 2022 மே 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டமொன்று, எதிர்வரும் 22ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளது,

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் ஹட்டன் டி கே டப்ளியூ கலாசார மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர்  "நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிலைப்பாடு" தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.

இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்கள் மகளிர் அணி இணைப்பாளர்கள் ,கட்சியின் உயர்பீட முக்கியஸ்தர்கள் உட்பட ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X